சிறிய மாற்றங்களுடன் வெர்னாவை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்
தீபாவளியையொட்டி சிறிய மாற்றங்களுடன் கூடிய ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், அடுத்ததாக வெர்னாவில் கை வைத்துள்ளது ஹூண்டாய்.
மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகித்து வரும் ஹூண்டாய் வெர்னாவில் வசதிகளை கூட்டிக் குறைத்து மாற்றங்களை செய்திருக்கிறது ஹூண்டாய். விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பேக்கலிட் சுவிட்சுகள்
பவர் விண்டோஸ் சுவிட்சுகளில் இரவிலும் எளிதாக தெரியும் வகையிலான மெல்லிய ஒளிதரும் பேக்கலிட் லைட்டுகளுடன் வருகிறது.

ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகள்
ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டிருக்கும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளில் பேக்கலிட் விளக்குகள் இருக்கும்.

புதிய அலாய் வீல்கள்
புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

ரன்னிங் விளக்குகள்
ஹூண்டாய் ஐ20 காரில் கொடுக்கப்பட்டது போன்று பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஆப்ஷனலாக வழங்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. ஆனால், இதுபற்றி உறுதியான தகவல் இல்லை.

ஹெட்ரெஸ்ட் குறைப்பு
பின்புற இருக்கையில் இருந்த மூன்று ஹெட்ரெஸ்ட்டுகளை இரண்டாக குறைக்கிறது ஹூண்டாய்.

ஸ்பேர் வீல்
அலாய் வீல் கொண்ட ஸ்பேர் வீலுக்கு பதிலாக இனி ஸ்டீல் ரிம் கொண்ட ஸ்பேர் வீலும் வரும்.

ரிலீஸ்
தீபாவளியையொட்டி இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட வெர்னா மாடலை விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








