புனே ஹூண்டாய் ஷோரூமில் வெலாஸ்ட்டர்...குவியும் பார்வையாளர்கள்
கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் ஹூண்டாய் வெலாஸ்ட்டர் பிரிமியம் கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதே பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும், இந்த காரை பலர் இந்த கார் எப்போது இந்தியாவுக்கு வரும் என்ற கேள்வியுடன் அங்கிருந்த ஹூண்டாய் பிரதிநிதிகளை துளைத்தெடுத்தனர்.
பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ள செய்யும் அசத்தலான வடிவமைப்பு கொண்ட இந்த புதிய பிரிமியம் காரை தற்போது புனேயில் உள்ள ஹூண்டாயின் கார்வ் டீலரில் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இது அங்கு பார்வையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆய்வு
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்ததோடு நில்லாமல், இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான ஆய்வுப் பணிகளை ஹூண்டாய் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கால் சென்டர் மூலம் தகவல்
தகுதியுடைய வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வதற்காக கால் சென்டர் மூலம் வெலாஸ்ட்டர் குறித்த தகவல்களை ஹூண்டாய் கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

பிரிமியம் கார்
இந்த கார் பிரிமியம் ரகத்தில் நிலைநிறுத்தப்படும். 3 கதவுகள் கொண்டதாக இருக்கும்.

இன்று வரை மட்டுமே
இந்த கார் புனே ஷோரூமில் இன்று வரை மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கும்.

விலை
ரூ.20 லட்சம் விலையில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம் எப்போது?
புனே ஷோரூமில் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இந்த கார் உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படமாட்டாது என ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








