இந்தியாவில் வெலாஸ்ட்டர் அறிமுக திட்டத்தை கைவிட்ட ஹூண்டாய்

By Saravana

இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக புதிய கார் மாடல்களை இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். ஹூண்டாய் அறிவித்துள்ள புதிய கார் லிஸ்ட்டில் வெலாஸ்ட்டர் இடம் பெறவில்லை.

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் வெலாஸ்ட்டர் பிரிமியம் எஸ்யூவி காரை ஹூண்டாய் பார்வைக்கு வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் புனேயிலுள்ள ஷோரூம் ஒன்றில் வெலாஸ்ட்டரை சில நாட்கள் பார்வைக்கு வைத்திருந்தது.

Hyundai Veloster

இதனால், இந்த புதிய கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில், ஹூண்டாய் தெரிவித்துள்ள புதிய கார் லிஸ்ட்டில் புதிய ஹேட்ச்பேக் கார், எம்பிவி, எஸ்யூவி ஆகியவை கூறப்பட்டுள்ளன. ஆனால், வெலாஸ்ட்டர் இடம் பெறவில்லை.

வெலாஸ்ட்டரை இந்தியாவில் களமிறக்கினால் போனியாகுமா என்பது குறித்து கடந்த ஆண்டு முதல் ஹூண்டாய் தீவிர விசாரணைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில், எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்பதால் வெலாஸ்ட்டர் அறிமுக திட்டத்தை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2013, 16:44 [IST]
English summary
Korean car maker Hyundai will launch new models in Indian market, but company is not ready to launch Veloster. Earlier, Hyundai was unveiled Veloster in 2011 Delhi Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+