லம்போர்கினியின் பொன்விழா: 1,200 கிமீ.,க்கு கார்களின் அணிவகுப்பு பயணம்
லம்போர்கினி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், இத்தாலியில் லம்போர்கினி கார்களின் சிறப்பு அணிவகுப்பு சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 8ந் தேதி வடக்கு இத்தாலியிலுள்ள பியஸா கேஸ்டெல்லோ என்ற இடத்தில் துவங்கிய இந்த அணிவகுப்பு பயணம் நாளை மிலன் நகரில் நிறைவடைகிறது. ஸ்லைடரில் லம்போர்கினி அணிவகுப்பு சுற்றுப் பயணத்தின் பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்
மொத்தம் 29 நாடுகளை சேர்ந்த 350 லம்போர்கினி கார் உரிமையாளர்கள் இந்த அணிவகுப்பு சுற்றுப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்
அதிகபட்சமாக இங்கிலாந்திலிருந்து 71 லம்போர்கினி கார்கள் கலந்து கொண்டுள்ளன. இத்தாலி, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திலிருந்து தலா 30 கார்கள் கலந்து கொண்டுள்ளன.

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்
பலவிதமான வண்ணங்களில் 4 கிலோமீட்டர் நீளத்துக்கு லம்போர்கினி கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை பெரும் சிலிர்க்க வைத்தது.

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்
குவைத்திலிருந்து வந்த 23 வயதுடைய இளம் உரிமையாளரும், பிரான்சிலிருந்து வந்த 75 வயதுடைய லம்போர்கினி கார் உரிமையாளரும் அடங்குவர்.

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்
இந்த அணிவகுப்பு சுற்றுப் பயணத்தில் 1963ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முதல் 350ஜிடி கார், கல்லார்டோ, அவென்டேடார் உள்ளிட்ட கார்கள் பங்கேற்றுள்ளன.

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்
இந்த சிறப்பு அணிவகுப்பு சுற்றுப் பயணத்தில் இந்தியாவிலிருந்து ரேமன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுதம் சிங்கானியா பங்கேற்றுள்ளார்.

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்

லம்போர்கினி அணிவகுப்பு பயணம்



Click it and Unblock the Notifications








