அடுத்த ஆண்டு இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயம் இல்லை?

கடந்த 2011ல் இருந்து இந்தியாவில் ஃபார்முலா - 1 கார் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில்தான் ஆண்டுதோறும் நடக்கிறது.
2015ம் ஆண்டு வரை ஃபார்முலா - 1 பந்தயங்களை நடத்துவதற்கு சர்வதேச ஃபார்முலா -1 சம்மேளனத்துடன் ஜேபி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில், ஹங்கேரியில் நடந்த ஃபார்முலா - 1 பந்தயத்தின்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஃபார்முலா - 1 சர்வதேச தலைவர் பெர்னி எக்கல்ஸ்டன் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஃபார்முலா- 1 பந்தயம் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிலவும் அரசியல் சர்ச்சைகள்தான் இதற்கு காரணம் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த தகவல் இந்திய ஃபார்முலா- 1 ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ஃபார்முலா- 1 பந்தயத்தை நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகள் ரஷ்யாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் விதிக்கப்படும் அதிக வரி காரணமாகவே இந்த முடிவுக்கு காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், வரும் செப்டம்பர் மாதம் இறுதி அட்டவணை வெளியிடும்போதுதான் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஃபார்முலா - 1 பந்தயம் நடைபெறுவது குறித்து தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








