இந்திய சாலைகள் பாதுகாப்பற்றவை: உலக சுகாதார அமைப்பு

By Saravana
Road Accident
"உலகிலேயே இந்திய சாலைகள் மிகவும் ஆபத்தானவை," என உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதலிடம் வகிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை செயல்படுத்துவதிலும் இந்தியா மோசமானதாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் குறைவான இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே ஹெல்மெட் அணிகிறார்களாம். ஹெல்மெட் அணிந்து பின்னால் அமர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்றும், 27 சதவீத கார் ஓட்டிகள் மட்டுமே சீட் பெல்ட் அணிகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் சாலை விபத்தில் சிக்கி காயமடையும் 49 சதவீதத்தினரில் 11 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்களாம். மீதம் உள்ளோருக்கு மருத்துவ உதவி கிடைப்பதில்லை.

மேலும், சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு அவசர கால உதவிகள் கிடைப்பதில் நம் நாடு மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டில் உலகிலேயே சாலைவிபத்துக்களில் அதிகம் இழந்தோர் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அந்த ஆண்டு மட்டும் 1.43 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்து, சீனாவில் 70,134 பேரும், பிரேசிலில் 36,499 பேரும் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் சாலை விதிகளை பின்பற்றாததும், அதனை அரசு நிர்வாகம் சரிவர செயல்படுத்தாததுமே பெரும்பான்மையான விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2013, 11:15 [IST]
English summary
The World Health Organization has released it global report on road safety which reveals the pathetic state of Indian road safety. According to the WHO report India tops the list of most deaths caused due to road accidents, while also rating very poorly in when it comes to safety rule compliance and law enforcement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+