நிசான் இன்ஃபினிட்டியின் புதிய சொகுசு கார் கான்செப்ட்!
இன்ஃபினிட்டி பிராண்டில் புதிய என்ட்ரி லெவல் சொகுசு கார் கான்செப்ட்டை பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் நிசான் அறிமுகப்படுத்த இருக்கிறது.
செப்டம்பர் 10ம் தேதி பிராங்க்ஃபர்ட் ஷோவில் நடக்கும் விழாவில் இந்த புதிய கான்செப்ட் காரை நிசான் பத்திரிக்கையாளர் மத்தியில் அறிமுகம் செய்கிறது. க்யூ30 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் கார் பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட க்யூ50 சொகுசு காரின் கான்செப்ட் அடிப்படையில் இந்த காரும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இன்ஃபினிட்டி பிராண்டின் டிசைன் பிரிவு இயக்குனர் அல்ஃபோன்ஸா அல்பாஸியா தலைமையில் வடிவமைக்கப்படும் முதல் இன்ஃபினிட்டி கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தஸ்தையும், புதுமையையும் விரும்பும் இளைய சமுதாயத்தை கவர்ந்திழுக்கும் வகையிலான டிசைனுடன் இந்த கார் இருக்கும் என்று அல்ஃபோன்ஸா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








