கூட்டிக் கழித்து பார்த்தால் பெட்ரோல் கார்தான் பெஸ்ட்?!

கடந்த ஆண்டு செப்டம்பரில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டதும் பெட்ரோல் கார்களின் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில், இந்த ஆண்டு டீசல் விலையை ரூ.10 வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது டீசல் கார் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
டீசல் விலை உயர்த்தப்பட்டால் எதிர்காலத்தில் பெட்ரோல் கார்களுக்கான மவுசு மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நாள் ஒன்றுக்கு 50 கிமீ வரை செல்லும் வாடிக்கையாளர்களை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் கார்களுக்கான முதலீடு, எரிபொருளுக்கான செலவீனம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில், டீசல் விலையை மேலும் கூட்டும்போது, டீசல் கார்களுக்கான முதலீட்டையும், பெட்ரோல் கார்களுக்கான எரிபொருள் செலவீனத்தையும் ஒப்பிடும்போது, குறிப்பிட்ட கால அளவில் பொருளாதார ரீதியில் பெட்ரோல் கார்கள்தான் பெஸ்ட் என்ற நிலை ஏற்படும்.
மேலும், பராமரிப்பு மற்றும் இதர அம்சங்களில் பார்க்கும்போது டீசல் கார்களை காட்டிலும் பெட்ரோல் கார்கள் சிக்கனமானதாக இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கார்பன் புகை வெளியிடுவதிலும் பெட்ரோல் கார்கள் சிறந்ததாக இருப்பதும் பெட்ரோல் கார்கள் பெஸ்ட் என்று கூறுவதற்கு காரணமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








