ஜாகுவார் காம்பெக்ட் எஸ்யூவியின் முகப்பு படம் வெளியீடு
முதல் ஜாகுவார் காம்பெக்ட் எஸ்யூவியின் முகப்பு படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று கான்செப்ட் மாடலின் முகப்பு படம் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட உள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட உள்ளது. படங்கள், கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்."

டீசர் படம்
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட டீசர் படம் இது. நேற்று வெளியிடப்பட்ட கான்செப்ட் காரின் முகப்பு படம் அடுத்த ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

முகப்பு
ஜாகுவார் கார்களுக்கே உரிய முகப்பு கிரில், படு கவர்ச்சியான ஹெட்லைட், ஏர் இன்டேக், பிரத்யேக ரியர் வியூ கண்ணாடிகள் கொண்டதாகவும், நடு மையத்தில் ஜாகுவார் லோகோவுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி
சி- எக்ஸ் 17 என்ற குறியீட்டு பெயரில் ஜாகுவாரின் புதிய மாடுலர் அலுமினியம் கட்டமைப்பு பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஜாகுவாரின் புதிய கார் மாடல்கள் இந்த புதிய பிளாட்ஃபார்மில்தான் வடிவமைக்கப்பட உள்ளன.

சாஃப்ட் ரோடர்
லேண்ட்ரோவர் எஸ்யூவிகள் போல் அல்லாது ஆடி, பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் சாஃப்ட் ரோடர் எஸ்யூவிகளின் ரகத்தில் வருகிறது.

போட்டியாளர்கள்
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இது போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








