விரைவில் எஃப் டைப் கூபே மாடலை அறிமுகப்படுத்தும் ஜாகுவார்!

கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஜாகுவார் எஃப் டைப் கன்வெர்ட்டிபிள் கார் தற்போது உலகின் அழகான ஓபன் டாப் கார் மாடல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, எஃப் டைப் காரின் கூபே மாடலையும் ஜாகுவார் அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த மாதம் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jaguar F type Coupe

ஓபன் டாப் மாடலைவிட கூபே மாடல் பெர்ஃபார்மென்ஸில் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த காரை அறிமுகப்படுத்துகிறது ஜாகுவார்.

ஜாகுவார் எஃப் டைப் கன்வெர்ட்டிபிள் மாடல் சர்வதேச மார்க்கெட்டில் 340 எச்பி ஆற்றல் கொண்ட 3.0 லிட்டர் வி6 எஞ்சின், 380 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி6 எஞ்சின் மற்றும் 490எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.0 லிட்டர் வி8 எஞ்சினுடன் கிடைக்கிறது.

Jaguar F type Coupe

இதில், 340 எச்பி ஆற்றல் கொண்ட மாடல் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கூபே மாடலும் மேற்கண்ட மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் நவம்பரில் டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த காரின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2013, 11:46 [IST]
English summary
A fixed top always offers better performance due to technical reasons and the roofless version, while slightly less capable in term of performance, makes up for it with its looks. Very rarely do automakers ever steer from this unwritten norm and take the opp path. Porsche, for example, did this with the Boxster convertible. The highly desirable Cayman, a fixed top, was its offspring. Jaguar is soon expected to repeat it with the F-Type, arguably the most beautiful convertible ever.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+