சொகுசு பஸ் தயாரிப்பில் இறங்கும் ஜேபிஎம்: வால்வோவுக்கு அடுத்த நெருக்கடி
சொகுசு பஸ் தயாரிப்பில் கால் பதிக்கிறது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜேபிஎம் குழுமம். ஃபோர்டு, ஹோண்டா மற்றும் ஃபியட் கார் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் சப்ளையராக டெல்லியை சேர்ந்த ஜேபிஎம் ஆட்டோ செயல்படுகிறது.
இந்த நிலையில், இத்தாலியை சேர்ந்த பிரடாமினாரினி பஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சொகுசு பஸ் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதற்கான, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ஜேபிஎம் தெரிவித்துள்ளது. வால்வோ, மெர்சிடிஸ் பென்ஸ், இசூஸு மற்றும் ஸ்கானியாவை தொடர்ந்து ஜேபிஎம் குழுமமும் சொகுசு பஸ் மார்க்கெட்டில் களமிறங்குகிறது.

அறிமுகம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சொகுசு பஸ் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக ஜேபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாடல்கள்
சிஎன்ஜியில் இயங்கும் 60 இருக்கைகள் கொண்ட நகர பஸ்கள் மற்றும் நகரங்களுக்கு இடையில் இயக்குவதற்கான சொகுசு பஸ்களை தயாரிக்க ஜேபிஎம் முடிவு செய்துள்ளது.

முதலீடு
பஸ் தயாரிப்புக்காக ரூ.500 கோடி முதலீட்டை ஜேபிஎம் குழுமம் செய்ய இருக்கிறது. எதிர்காலத்தில் வர்த்தகத்தை பொறுத்து கூடுதல் முதலீடுகளை செய்யும்.

பஸ் தயாரிப்பு
ஹரியானா மாநிலம், பரீதாபாத் அருகே புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த புதிய ஆலையில் இருந்து பஸ் தயாரிப்பு துவங்கும். ஆண்டுக்கு 2,000 பஸ்களை இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்ய இயலும்.

சப்ளையர்கள்
பஸ் தயாரிப்புக்கு தேவையான முக்கிய பாகங்களை உள்நாட்டிலேயே பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது தகுதியுடைய நிறுவனங்களை தேர்வு செய்து ஒப்பந்தம் போட்டு வருவதாக ஜேபிஎம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








