புதிய மோட்டார் இல்லத்தை அறிமுகம் செய்த ஜேசிபிஎல்!
ரூ.75 லட்சம் விலையில் புதிய மோட்டார் இல்லத்தை ஜேசிபிஎல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கனரக வாகன கட்டுமானத்தில் புகழ்பெற்ற இந்த நிறுவனம் தற்போது இத்தாலியை சேர்ந்த பிஎல்ஏ நிறுவனத்துடன் இணைந்து இந்த மோட்டார் இல்லங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
படுக்கை வசதி, சமையலறை உள்ளிட்ட வீடுகளில் உள்ளதுபோல் அனைத்து வசதிகளுடன் வந்திருக்கும் இந்த புதிய மோட்டார் இல்லம் இரண்டு விதமான மாடல்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க வந்திருக்கும் இந்த புதிய மோட்டார் இல்லத்தில் இருக்கும் வசதிகளை ஸ்லைடரில் காணலாம்.

ஃபியட் டுகாட்டோ சேஸிஸ்
ஃபியட் நிறுவனத்தின் டுகாட்டோ சேஸிஸில் இந்த மோட்டார் இல்லம் கட்டப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த மோட்டார் இல்லத்தை ஃபியட்டின் 3.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் உயிர் கொடுக்கிறது. இந்த எஞ்சின் 180 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். யூரோ 5 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் 4 கிரேடு டீசலில் இயங்கும்.

மாடல்கள்
ஜேசிபிஎல் பிஎல்ஏ எச்எஸ் 75 மோட்டார் இல்லத்தில் 4 பேருக்கான இடவசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. 5 பேருக்கான இடவசதி கொண்ட மாடலும் உள்ளது.

டைனிங் ஹால்
உணவருந்துவதற்கான டைனிங் டேபிள் மற்றும் சொகுசான நாற்காலிகளுடன் கூடிய அறை.

சமயலறை
மோட்டார் இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமயலறையில் 3 பர்னர்கள் கொண்ட கேஸ் அடுப்பு மற்றும் வாஷ் பேஸின் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

பொருட்கள் வைக்க வசதி
பொருட்களை வைத்துக் கொள்வதற்கான அதிக இடவசதி இந்த மோட்டார் இல்லத்தில் செய்யப்பட்டுள்ளன.

வாஷ் ரூம்
நவீன கால வசதிகளுடன் வாஷ் ரூம்.

படுக்கை வசதி
இரண்டு பேர் தூங்குவதற்கான தனித்தனி படுக்கைகளை உண்டு.

மாஸ்டர் பெட்ரூம்
விசாலமான மாஸ்டர் பெட்ரூமும் இருக்கிறது.

அட்ஜெஸ்ட் வசதியுடன் பெட்ரூம்
இந்த மாஸ்டர் பெட்ரூமை இடவசதிக்காக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

விலை
ரூ.75 லட்சம் மற்றும் ரூ.80 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








