சென்னையில் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்கள்: படங்கள்
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்களை ஃபியட் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதற்காக, ஜீப் பிராண்டின் செரோக்கீ மற்றும் ரேங்க்லர் எஸ்யூவிகளை இந்தியாவின் பல்வேறு இடங்களில் வைத்து சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சோதனையில் இருக்கும் ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்க்லர் எஸ்யூவி கார்கள் சென்னையில் உள்ள ஃபியட் டீலருக்கு பராமரிப்பு பணிகளுக்காக வந்துள்ளன. இதனை டீம் ஃபியட் குழுவை சேர்ந்தவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
வரும் அக்டோபரில் வர இருக்கும் இந்த புதி கார்களில் சோதனைகளுக்காக ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. சென்னை ஃபியட் சர்வீஸ் சென்டரில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார்களை ஸ்லைடரில் காணலாம்.











Source: Indian Autos Blog


Click it and Unblock the Notifications








