ஜீப் பிராண்டின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... நல்லா பார்த்துக்கோங்க!!
ஜீப் பிராண்டின் புதிய காம்பெக்ட் எஸ்யூவிக்கு ஜீப்ஸ்டெர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நல்லா பார்த்துக்கோங்க என்று சொன்னதற்கு அர்த்தம், இது இந்தியாவிலும் வருவதற்கான அதிக வாய்ப்புள்ள மாடல் என்பதுதான். இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி பற்றிய சிறப்பு தகவல்கள் ஸ்லைடரில்...!!

பெயர் காரணம்
ஜீப்ஸ்டெர் என்ற பெயர் ஜீப் பிராண்டுக்கு புதிதல்ல. 1948ம் ஆண்டு ஓபன் டாப் வில்லீஸ் எஸ்யூவி முதன்முதலாக ஜீப்ஸ்டெர் என்று அழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1950, 1966 மற்றும் 1999ம் ஆண்டு ஜீப் மாடல்களுக்கு ஜீப்ஸ்டெர் என்ற பிராண்டிலேயே விற்பனை செய்யப்பட்டது.

பிளாட்ஃபார்ம்
ஜீப் பிராண்டின் தாய் நிறுவனமான ஃபியட்டின் புதிய 500 எக்ஸ் கிராஸ்ஓவரின் பல டிசைன் தாத்பரியங்களை இந்த காரிலும் கையாண்டுள்ளனர். இரு மாடல்களும் தோற்றத்தில் பல ஒற்றுமைகளுடன் வரும்.

ஆஃப் ரோடர்
முதலில் ஃப்ரண்ட் வீல் மற்றும் ரியர் வீல் டிரைவ் கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்படும். பின்னர், ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சின்
இந்த புதிய கிராஸ்ஓவரில் ஃபியட் 500 மற்றும் 500 எல் மாடல்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் வரும் என்று தெரிகிறது. 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்கள் கொண்டிருக்கும்.

அறிமுகம்
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய கிராஸ்ஓவர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவருகிறதா?
இது என்ட்ரி லெவல் காம்பெக்ட் எஸ்யூவி மாடல். எனவே, இது நிச்சயமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. 2015ல் இந்த புதிய கிராஸ்ஓவர் வரலாம் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








