செரோக்கீ ஸ்டைலில் மினி ஜீப்பை களமிறக்கும் ஜீப் பிராண்டு!
செரோக்கீ ஸ்டைலில் புதிய மினி ஜீப் மாடலை அறிமுகப்படுத்த ஜீப் பிராண்டு திட்டமிட்டுள்ளது. ஜீப் பிராண்டு பிரிமியம் எஸ்யூவி மாடல்களை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஃபியட். முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவும், பின்னர் இந்தியாவிலேயே ஜீப் பிராணடு மாடல்களை அசெம்பிள் செய்யவும் ஃபியட் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், உலக அளவில் புத்தம் புதிய காம்பெக்ட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த ஜீப் பிராண்டு திட்டமிட்டுள்ளது. செரோக்கீ எஸ்யூவி 4.6 மீட்டர் நீளம் கொண்டது. ஆனால், செரோக்கீ ஸ்டைலில் வரும் இந்த புதிய ஜீப் 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். ஃபியட் பிளாட்பார்மில் இந்த புதிய ஜீப் வடிவமைக்கப்பட உள்ளதாக ஜீப் பிராண்டு சிஇஓ மைக் மான்லே தெரிவித்துள்ளார்.

உற்பத்தி
இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் புதிய ஜீப் மாடல் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோன்று, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட மார்க்கெட்டுகளிலும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. முதலில் சீனா, ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விட்ட பின்னரே தனது தாயகமான அமெரிக்காவில் இந்த காம்பெக்ட் ஜீப்பை அறிமுகப்படுத்த ஜீப் பிராண்டு முடிவு செய்துள்ளது.

போட்டியாளர்கள்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

பிரிமியம்
டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை போட்டியாளர்களாக கூறினாலும், அதிக பிரிமியம் அம்சங்களை கொண்டதாக இருக்கும்.

இந்தியாவுக்கு எப்போது?
2015 அல்லது 2016ம் ஆண்டு இந்தியாவில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

சிஇஓ கருத்து
காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறது. எனவே, இந்த ரகத்தில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த விளைகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








