சஞ்செய் குப்தாவுக்கு 'வெயிட்'டான கிப்ட் கொடுத்த ஜான் ஆபிரஹாம்!
'சூட் அவுட் வதலா' படம் ஹிட் ஆனதற்கு பரிசாக இயக்குனர் சஞ்செய் குப்தாவுக்கு விலையுயர்ந்த யமஹா வி மேக்ஸ் பைக்கை நடிகர் ஜான் ஆபிரஹாம் பரிசாக வழங்கியுள்ளார்.
படம் வெற்றியடைந்தால் ஒரு காஸ்ட்லி பைக்கை பரிசளிப்பதாக சூட்அவுட் வதலா படத்தின் இயக்குனர் சஞ்செய் குப்தாவிடம் ஜான் ஆபிரஹாம் உறுதியளித்தாராம். அதன்படி, ஹிட் ஆன கையோடு முதல் வேலையாக பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.

ட்விட்டரில் தகவல்
இந்த பைக்கை பரிசாக பெற்றது குறித்து ட்விட்டரில் சூட்அவுட் வதலா இயக்குனர் சஞ்செய் குப்தா தெரிவித்துள்ளார்.

பைக் பிரியர்
சஞ்செய் குப்தா பைக் பிரியர் என்பது முன்னரே தெரியும். எனவே, படம் வெற்றியடைந்தால் அவருக்கு பைக் ஒன்றை பரிசாக வழங்க முடிவு செய்தேன் என்று ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார்.

தருணம் பார்த்திருந்தேன்
இதுகுறித்து ஜான் ஆபிரஹாம் மேலும், கூறுகையில், சஞ்செய் குப்தாவிடம் பைக் ஒன்றை பரிசளிப்பது குறித்து முன்பே உறுதியளித்திருந்தேன். எனது உறுதிமொழியை தக்க தருணத்தில் நிறைவேற்றியுள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.

சஞ்செய் நெகிழ்ச்சி
ஜான் ஆபிரஹாம் பைக்கை பரிசாக அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது விருப்பத்தை புரிந்துகொண்டு அதற்கு தகுந்த பரிசை வழங்கியுள்ளார். வீட்டிற்கு எடுத்துச் சென்று எனது குழந்தைகளிடம் காண்பித்தேன். எனது இரண்டாவது மகன் பைக் பிரியன். எனவே, அவனுக்கு இந்த பைக் மிகவும் பிடித்துவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.

யமஹா வி மேக்ஸ்
குரூஸர் ரகத்தை சேர்ந்த இந்த பைக்கில் 1679 சிசி எஞ்சின் பொருத்தப்ப்டிருக்கிறது. இந்த எஞ்சின் 194 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

மைலேஜ்
நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 7 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 11 கிமீ., மைலேஜையும் கொடுக்கும்.

ஹெவி வெயிட்
இந்த பைக் 310 கிலோ எடை கொண்டது.

விலை
ரூ.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

யமஹா வி மேக்ஸ்

யமஹா வி மேக்ஸ்



Click it and Unblock the Notifications








