சென்னை ஆலையில் ரூ.1,430 கோடியை முதலீடு செய்யும் ஜேகே டயர்ஸ்!
சென்னையிலுள்ள ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக, ரூ.1,430 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ஜேகே டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்களுக்கான 10 புதிய டயர்களை ஜேகே டயர்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த டயர்கள் வந்துள்ளன. இந்தநிலையில், டயர் உற்பத்தியை கூட்டுவதற்காக சென்னை ஆலையில் மிப்பெரிய முதலீட்டை செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் பங்கேற்ற ஜேகே டயர்ஸ் தலைவர் ஏ.கே. பஜோரியா கூறியதாவது," எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சென்னை ஆலையை ரூ.1,430 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். இதன்மூலம், கூடுதலாக ஆண்டுக்கு 8 லட்சம் பஸ் டயர்களையும், 20 லட்சம் கார் டயர்களையும் தயாரிக்க முடியும்.
தவிர, மெக்சிகனில் உள்ள எங்களது துணை நிறுவனமான டோர்னெல் நிறுவனத்தின் ஆலையின் உற்பத்தி திரனை ரூ.140 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். இந்த ஆலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டவுடன், டோர்னெல் டயர்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
இந்த ஆலையில் பஸ், டிரக் மற்றும் கார்களுக்கான ரேடியல் டயர்கள் தயாரிப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிகரித்து வரும் தேவையை கருதி, சென்னை ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








