ஏப்ரலில் நானோ விற்பனை சரிவு: டாடாவுக்கு நெருக்கடி

கார் மார்க்கெட் மந்தநிலை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை வெகுவாகவே பாதித்துள்ளது. அனைத்து கார்களுமே விற்பனையில் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை.
அதிலும், குறிப்பாக நானோ காரின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 984 நானோ கார்கள் மட்டுமே விற்பனையாகி டாடாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 8,028 நானோ கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தளவுக்கு விற்பனை சரிந்திருப்பது அந்த நிறுவனத்தை பெரும் கவலை கொள்ள செய்துள்ளது.
விற்பனையை ஊக்குவிக்க எடுத்த தற்காலிக திட்டங்கள் எதுவுமே கைகொடுக்கவில்லை. இதுதவிர, கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 166 நானோ கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும்போது ஏற்றுமதியும் 95 சதவீதம் சரிந்துவிட்டது.
இதனால், நானோ விற்பனையை அதிகரிக்க மாற்று வழிகள் குறித்து தற்போது டாடா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








