இது சினம் கொண்ட காளையாம்... கைகளுக்கு தைரியமூட்டுங்கள்
ஒருவழியாக கேடிஎம் டியூக் 390 பைக்கை இந்திய மார்க்கெட்டில் கொண்டு வருவதற்கு கேடிஎம் ஆயத்தமாகியுள்ளது. பஜாஜ் ஆட்டோவின் கூட்டணியாக செயல்படும் கேடிஎம் இன்னும் சரியாக இரண்டு வாரத்தில், அதாவது வரும் 25ந் தேதி புத்தம் புதிய டியூக் 390 என்ற புதிய 375சிசி பைக்கை அறிமுகப்படுத்த இருப்பது உறுதியாகியிருக்கிறது.
கடந்த மாதம் தனது தாயகமான ஆஸ்திரியாவில் சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், முதன்முறையாக கேடிஎம் டியூக் 390 பைக்கை பார்க்கும் அனுபவத்தை பத்திரிக்கையாளர்களுக்கு கிடைத்தது. இந்த பைக் பற்றி அனைவரும் வைத்த பொதுவான விமர்சனம் கோபம் கொண்ட காளையை போன்று இருப்பதாக வர்ணித்துள்ளனர்.
கேடிஎம் டியூக் 390 பைக்கில் 43 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 35 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். டியூக் 200 பைக்கில் எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த புதிய பைக்கில் மெட்ஸிலர் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இந்த பைக் வரும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ரூ.2 லட்சத்தில் விற்பனைக்கு வரலாம்.
இந்திய மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் டியூக் 390 பைக்கின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.












Click it and Unblock the Notifications








