ரூ.3 கோடியில் விற்பனைக்கு வந்த தங்க லம்போர்கினி சூப்பர் கார்
வேகம், வித்தியாசம் என லம்போர்கினி சூப்பர் கார்களை விரும்புவதற்கு அடுக்கடுக்கான காரணங்களை கூறலாம். இந்த காரணத்துடன் தற்போது லம்போர்கினி காரை விரும்புவதற்கு கூடுதல் காரணம் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மியாமியை சேர்ந்த டீலர் ஒருவர் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட லம்போர்கினி அவென்டேடார் காரை தயாரித்துள்ளார்.
தகதகக்கும் இந்த லம்போர்கினிக்கு ஏயு79 என பெயரிடப்பட்டிருக்கிறது. டிசைனர்களின் இடைவிடாத முயற்சியிலும், உழைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்க லம்போர்கினி பற்றிய கூடுதல் தகவல்கள் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை
தங்க லம்போர்கினி அவென்டேடார் காரை ரூ.3 கோடி விலையில் விற்பனை செய்ய அந்த டீலர் திட்டமிட்டுள்ளார்.

அயாராத உழைப்பு
70 நாட்களில் இந்த லம்போர்கினியை பணியாளர்கள் இரவு பகல் பாராது உருவாக்கியுள்ளனர்.

பெயர் காரணம்
தங்கத்தில் ரசாயண பெயரான ஏயு79 என்பதையே இந்த காருக்கு பெயராக சூட்டியிருக்கின்றனர்.

பவர்
இந்த கார் 700 பிஎச்பி ஆற்றல் கொண்டது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 350 கிமீ வேகத்தில் ஆற்றல் கொண்ட கார் அவேன்டேடார்.

தகதகக்கும் தங்க லம்போர்கினி சூப்பர் கார்!
மெல்லிய விளக்கொளியில் தங்கத் தாரகையாக மின்னும் அவென்டேடார்.

தகதகக்கும் தங்க லம்போர்கினி சூப்பர் கார்!
சிறகை விரித்த பறவையாய் டீலர் யார்டில் பலத்த பாதுகாப்புடன் நிற்கும் அவென்டேடார்.

தகதகக்கும் தங்க லம்போர்கினி சூப்பர் கார்!
அவென்டேடார் மீது பட்ட ஒளி பட்டொளியாய் எதிரொலிக்கும் காட்சி.


Click it and Unblock the Notifications








