மும்பைவாசிகளின் கண்களுக்கு விருந்தளித்த தங்க நிற லம்போ சூப்பர் கார்
மும்பையில் சமீபத்தில் நடந்த 2013 பார்க்ஸ் சூப்பர் கார் ஷோவில் 100க்கும் மேற்பட்ட லம்போ சூப்பர் கார்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தன. அதில், ஒரே ஒரு கார் மட்டும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஆம், அது டிசி கஸ்டமைசேஷன் நிறுவனத்தின் கைவண்ணத்தில் மாற்றப்பட்ட லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார்.
இந்த காரின் முன்கதவில் விஜே என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததால் இது விஜய் மல்லையாவின் காராக இருக்கும் என்று பேசப்பட்டது. ஏனெனில், மல்லையாவின் பார்முலா-1 கார்களிலும் அவரது இனிஷியல் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த கார் வருண் ஜெயின் என்பருடையது.
தங்க நிறத்தில் ஜொலித்த இந்த லம்போ சூப்பர் காருக்கு பிரிஸம் கோல்டு கலர் வண்ணத்தை பூசியிருக்கிறது டிசி நிறுவனம். கண்ணாடிகள் மற்றும் கூரை கருப்பு வண்ணத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. இதுதவிர, இன்டிரியரிலும் கைவைத்து அசத்தியிருக்கிறது டிசி. மேலும், பின்புறத்தில் டிசியின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தங்க லம்போ அவென்டேடார் கார் குறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்தியில் பல கோணங்களில் பார்த்து ரசித்த உங்களுக்கு நம்மூரின் தங்க நிற லம்போ படங்களையும் காண ஆவல் பிறக்கிறதல்லவா? அப்படியே, ஸ்லைடருக்கு வாருங்கள்.

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்

இது இந்தியாவின் தங்க லம்போ கார்



Click it and Unblock the Notifications








