வெனினோ டாப்பை கழற்றும் லம்போர்கினி!
லம்போர்கினி வெனினோ சூப்பர் காரின் ஓபன் டாப் வெர்ஷன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகமான லம்போர்கினி வெனினோ விலையுயர்ந்த சூப்பர் காராக பரைசாற்றிக் கொண்டது.

வெறும் 3 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வெனினோவின் கூரை இல்லாத ரோட்ஸ்டெர் மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது லம்போர்கினி.
இந்த ஓபன் டாப் வெர்ஷன் தற்போதைய ஹார்டு டாப் மாடலைவிட விலை அதிகமிருக்குமாம். 4.4 மில்லியன் டாலர் விலையில் புதிய வெனினோ ரோட்ஸ்டெர் விற்பனைக்கு வருகிறதாம்.
அடுத்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய வெனினோ ரோட்ஸ்டெர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








