இந்திய மூவர்ண கொடி வண்ணத்துடன் ஸ்பெஷல் லம்போ கார் அறிமுகம்!
தனது பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக லிமிடேட் எடிசன் கல்லார்டோ எல்பி-550-2 காரை லம்போர்கினி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. காரின் முன்பகத்திலிருந்து பின்புறம் வரை இந்திய தேசியக் கொடியின் வண்ணம் கொண்ட கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
மஞ்சள், வெள்ளை, பச்சை ஆகிய 3 நிறங்களில் தலா 2 வீதம் மொத்தம் 6 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்திய சாலை நிலைகளை மனதில் கொண்டு இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை உயர்த்திக் கொள்ளும் விதத்தில் ஒரு பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் உயரத்தை 40 மிமீ அதிகரித்துக் கொள்ள முடியும்.

லம்போர்கினி கல்லார்டோ லிமிடேட் எடிசன் காரில் 542 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 7.51 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ. ரூ.3.06 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








