லம்போ கல்லார்டோவின் வாரிசின் பெயர், விபரங்கள் கசிந்தது!
லம்போர்கினி கல்லார்டோ காரின் உற்பத்தி சமீபத்தில் நிறுத்தப்பட்டது அறிந்ததே. அதற்கு மாற்றாக புத்தம் புதிய காரை லம்போர்கினி அறிமுகம் செய்ய உள்ளதையும் நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்..
கல்லார்டோ இடத்தை நிரப்ப வரும் அந்த புதிய காருக்கு ஹூராகேன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஹரிக்கேன் என்று சூறாவளியை குறிக்கும் ஸ்பானிய மொழியின் ஹூராகென் என்ற வார்த்தையில் புதிய காருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த பெயர் கடந்த ஆண்டே லம்போர்கினி பதிவு செய்து வைத்துவிட்டது. தற்போது இந்த கார் கேப்ரெரா என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த புதிய லம்போர்கினி காரில் மேம்படுத்தப்பட்ட 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 600 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








