லம்போர்கினியின் சூப்பர் டிராக்டர்... பார்க்க பார்க்க பரவசம்!
சூப்பர் தயாரிப்பில் புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் புதிய சூப்பர் டிராக்டரை அறிமுகம் செய்திருக்கிறது. ஆரம்பத்தில் லம்போர்கினி டிராக்டர் தயாரிப்பில்தான் ஈடுபட்டு வந்தது. இதனை சமீபத்திய லம்போர்கினி நிறுவனம் பற்றிய செய்தியில் எழுதியிருந்தோம். லம்போர்கினி உரிமையாளர் ஃபெருஷியோ லம்போர்கினி வைத்திருந்த ஃபெராரி 250ஜிடி காரின் கிளட்ச் அடிக்கடி பிரச்னை கொடுத்ததால்தான் அவர் சூப்பர் கார் தயாரிப்பில் இறங்க காரணமாக இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில், தனது பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வகையில் தொடர்ந்து டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது லம்போர்கினி. தற்போது நைட்ரோ என்ற பெயரில் ஸ்டைலிஷ் டிசைனுடன் புதிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. லம்போவின் அசத்தலான சூப்பர் கார்கள் போன்றே இந்த டிராக்டரும் அசத்தலாக இருக்கிறது.

டிசைன்
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் இந்த டிராக்டரை லம்போ டிசைன் செய்திருக்கிறது. இத்தாலியை சேர்ந்த பிரபல டிசைனர் ஜியார்கெட்டோ ஜியுகியாரோ டிசைன் செய்துள்ளார்.

எல்இடி லைட்டுகள்
விலையுயர்ந்த கார்களில் இருப்பதுபோன்று இந்த டிராக்டரில் முகப்பிலும், பின்புறத்திலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை வண்ணக் கலவை கொண்டதாக பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

அசத்தும் இன்டிரியர்
சொகுசு கார்களைவிட ஆடம்பரமாக காட்சியளிக்கிறது இதன் இன்டிரியர். இந்த டிராக்டரில் 4 சிலிண்டர்கள் கொண்ட டெய்ட்ஸ் டயர் 4ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

கியர் பாக்ஸ்
இந்த டிராக்டரில் 3 ஸ்பீடு பவர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிஸ்க் பிரேக்
இந்த டிராக்டரில் செர்வோ மோட்டார் துணையுடன் இயங்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டிராக்டரில் பிரேக் பிடிக்க பெடல் மீது ஏறி நின்று சாகசம் காட்ட வேண்டியிருக்காது.


Click it and Unblock the Notifications








