அமெரிக்காவில் லம்போர்கினி டூப்ளிகேட் பாடி கிட் விற்பனை
லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்குவதற்கு கோடிகளை கொட்டி வாங்க வேண்டிய நிலை இருப்பதால், பலருக்கு அது கனவாகவே போய்விடுகிறது. இதுபோன்று லம்போர்கினி மீது வெறி கொண்டு கனவோடு சுற்றி திரிபவர்களை கவரும் விதமாக பழைய கார்களுக்கு டூப்ளிகேட் லம்போ பாடி கிட்டை அமெரிக்காவின், அலபாமாவை சேர்ந்த ஜாக்கி ஜான்சன் தலைமையில் செயல்படும் கார் கிட் ஐஎன்சி என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
டொயோட்டா எம்ஆர்2, போர்ஷே பாக்ஸ்டர், டோட்ஜ் நியோன், போன்டியாக் ஃபியரோ உள்ளிட்ட பழைய கார்களில், லம்போர்கினி டூப்ளிகேட் பாடி கிட்டுகளை மாட்டிக் கொண்டு ஜம்மென்று வந்துவிடலாம். இந்த நிலையில், ஜாக்கி ஜான்சன் நடத்தும் கார் கிட் ஐஎன்சி நிறுவனம் மீது வழக்குத் தொடர லம்போர்கினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ள தயார் என ஜாக்கி ஜான்சனும் கூறியிருக்கிறார்.

டூப்ளிகேட் லம்போ
லம்போர்கினி டூப்ளிகேட் பாடி கிட் மாட்டப்பட்ட மூர்சிலாகோ கார்.

ஃபைபர் கிளாஸ் பாடி
ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தி டூப்ளிகேட் கிட் தயாரிக்கப்படுகிறது.

விலை
1991 மாடல் லம்போர்கினி டயாப்லோ கார் அப்போது உலகின் அதிவேக கார் என்ற பெருமை பெற்றது. 2.40 லட்சம் டாலர் முதல் 2.50 லட்சம் டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஜாக்கி ஜான்சனின் பாடி கிட்டுகள் 1000 டாலர் முதல் 5000 டாலர் விலையில் கிடைக்கின்றன.

4 வாரங்கள் ஆகுமாம்
இந்த புதிய பாடி கிட்டுகளை மாட்டுவதற்கு 4 முதல் 5 வாரங்கள் ஆகுமாம்.

உஷாரய்யா உஷாரு...
லம்போ போன்றே பென்ட்லீ, ஃபெராரி கார்களின் டூப்ளிகேட் பாடி கிட்டுகளை தயாரித்து கொடுக்கிறது. அப்போ, கார் கிட் ஐஎன்சி மீது கார் நிறுவனங்கள் ஒரு கண் வைப்பது நல்லது.

மூர்சிலாகோ
லம்போ மூர்சிலாகோ காரின் டூப்ளிகேட் பாடி கிட் பொருத்தப்பட்ட கார்

லம்போ டயாப்லோ
லம்போ டயாப்லோ டூப்ளிகேட் கிட் பொருத்தப்பட்ட கார்.

டயாப்லோ கிட்
லம்போ டயாப்லோ ரோட்ஸ்டெர் டூப்ளிகேட் கிட் பொருத்தப்பட்ட கார்.


Click it and Unblock the Notifications








