இந்தியாவில் அறிமுகமானது லம்போர்கினி டிராக்டர்!
புனேயில் நடந்த வேளாண் கருவிகள் கண்காட்சியில் லம்போர்கினி டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. சாமே டைட்ஸ் ஃபார்(எஸ்டிஎஃப்) நிறுவனம் லம்போர்கினி பிராண்டில் முதலாவதாக 30 எச்பி திறன் கொண்ட டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, லம்போர்கினி பிராண்டில் 80 எச்பி வரையிலான திறன் கொண்ட டிராக்டர் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

முதலாவதாக வந்த 30 எச்பி டிராக்டரின் விலை விபரங்களை எஸ்டிஎஃப் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. விவசாயம பணிகள் மட்டுமின்றி, ஓட்டல்கள், கோல்ஃப் மைதானம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கு ஏற்றதாக இந்த டிராக்டர்கள் இருக்கும்.
தமிழகத்தில் ராணிப்பேட்டையில் உள்ள எஸ்டிஎஃப் தொழிற்சாலையில் லம்போர்கினி டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரூ.300 கோடியில் இந்த ஆலையில் புதிய உற்பத்தி பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 18,000 முதல் 25,000 டிராக்டர்கள் வரை இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








