இணையதளங்களில் கசிந்த லம்போர்கினி வெனினோ படங்கள்
லம்போர்கினி நிறுவனம் துவங்கப்பட்டு 50வது ஆண்டை பூர்த்தி செய்வதை கொண்டாடும் வகையில் புதிய சூப்பர் கார் ஒன்றை ஜெனீவா ஷோவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த காரின் விபரங்கள் மற்றும் படங்களை வெளியிடாமல் படு ரகசியம் காத்து வந்தது லம்போ. அதற்குள் எப்படியோ, இந்த படங்கள் இணையதளங்களில் கசிந்துவிட்டன.
வெனினோ என்று பெயரில் வர இருக்கும் இந்த புதிய லம்போ கார்தான் மிகவும் காஸ்ட்லியான லம்போ காராக இருக்கும். வெனினோ என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் விஷம் என்று பொருள். அவென்டேடார் சூப்பர் காரின் பிளாட்பார்மில்தான் இந்த வெனினோவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 740 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 3.1 மில்லியன் யூரோ விலை கொண்டதாக இருக்கும். மொத்தமே 3 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறதாம். அதுவம் ஏற்கனவே விற்றுவிட்டதாக லம்போ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவோ மோட்டார் ஷோவில் லம்போ வெனினோ

லம்போவின் 'டாப் சீக்ரெட்' ஹைப்பர் கார்

லம்போவின் 'டாப் சீக்ரெட்' ஹைப்பர் கார்

லம்போவின் 'டாப் சீக்ரெட்' ஹைப்பர் கார்

லம்போவின் 'டாப் சீக்ரெட்' ஹைப்பர் கார்

லம்போவின் 'டாப் சீக்ரெட்' ஹைப்பர் கார்



Click it and Unblock the Notifications








