லம்போ வெனினோதான் ரொம்ப அசிங்கமான கார்?
கார் வரலாற்றிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடைய கார் லம்போ வெனினோதான் என்று பிரபல ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஜெனீவோ மோட்டார் ஷோவில்தான் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் 3 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருப்பதாக லம்போர்கினி தெரிவித்தது.
இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் தளமான எட்மன்ட்ஸ், ஆட்டோமொபைல் வரலாற்றில் மிக அருவருப்பான தோற்றமுடையதாக டிசைன் செய்யப்பட்ட கார் லம்போ வெனினோதான் என்று தெரிவித்துள்ளது. இது லம்போவையும், அதன் ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
லாஃபெராரி, மெக்லாரன் பி1 உள்ளிட்ட கார்களுக்கு இணையாக பேசப்பட்டு வரும் இந்த லிமிடேட் எடிசன் கார் மணிக்கு 355 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த காரை லம்போர்கினி கடந்த மாதம் வெளியுலகுக்கு மிகுந்த பெருமையுடன் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், எட்மன்ட்ஸ் தளம் தெரிவித்துள்ள கருத்து பலரையும் திகைக்க வைத்துள்ளது. உண்மையிலேயே லம்போ அவ்வளவு அசிங்கமாவா இருக்கு? ஸ்லைடரில் உள்ள படங்களை பார்த்துவிட்டு நீங்களும் ஒரு கருத்தை தட்டிவிடுங்கள்.

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி வெனினோ



Click it and Unblock the Notifications








