300 வேகம் கொண்ட இந்த கூரை இல்லாத காரை ஓட்டும்போது எப்படியிருக்கும்?
லம்போர்கினி வெனினோ ஹைப்பர் காரின் கூரை இல்லாத ரோட்ஸ்டெர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாப் கியர் இதழ் இந்த புதிய காரின் படங்களை வெளியிட்டு இருக்கிறது.
படு கவர்ச்சியாக தோற்றமளிக்கும் இந்த புதிய ஹைப்பர் காரை பார்ப்பதைவிட ஓட்டும்போதுதான் அதன் முழுமையான புதிய அனுபவத்தை பெற முடியும் என லம்போர்கினி தெரிவித்துள்ளது.

வெனினோ கூபே
கார்பன் ஃபைபர் பாடியுடன் வடிவமைக்கப்பட்ட லம்போர்கினி வெனினோ ஹைப்பர் காராக புகழப்பெற்றாலும், வடிவமைப்பில் மோசமான காராக விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், லம்போ வெனினோ ரோட்ஸ்டெர் இந்த விமர்சனத்தை போக்கும்விதமாக வந்துள்ளது.

எஞ்சின்
இந்த காரில் 740 பிஎச்பி பவரை அளிக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. கூரை இல்லாதபோதும் லம்போ வெனினோ ரோட்ஸ்டெர் 1,490 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிப் பிடிக்கும். மணிக்கு 354 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. கூரை இல்லாமல் ஓட்டும்போது இந்த ஹைப்பர் கார் நிச்சயம் ஒரு த்ரில்லான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

விலை
வெனினோ கூபே மாடல் 4.4 மில்லியன் டாலரில் விற்பனைக்கு வந்ததுடன், மொத்தமே 3 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 9 வெனினோ ரோட்ஸ்டெர் கார்களை லம்போர்கினி விற்பனை செய்ய உள்ளது. ஒரு காரின் விலை 5.3 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.32.66 கோடி விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








