விமானம் தாங்கி கப்பலில் ரொம்ப கிராண்டாக அறிமுகமான புதிய லம்போ கார்!!
அபுதாபியில் நிறுத்தப்பட்டிருக்கும் இத்தாலி நாட்டு விமானம் தாங்கி கப்பலில் புதிய லம்போர்கினி வெனினோ ரோட்ஸ்டெர் காரை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது லம்போர்கினி.
அபுதாபியின் மினா சயீத் துறைமுகத்தில் இத்தாலி கடற்படைக்கு சொந்தமான 240 மீட்டர் நீளம் கொண்ட நேவ் கவோர் என்ற விமானம் தாங்கி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் வைத்து புதிய லம்போர்கினி வெனினோ ரோட்ஸ்டெர் காரை லம்போர்கினி அறிமுகம் செய்துள்ளது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவின் சில காட்சிகளை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.

ஏராள விருந்தினர்கள்
இந்த நிகழ்ச்சியில் அபுதாபிக்கான இத்தாலி தூதர் ஜார்ஜியோ ஸ்டாரேஸ், கடற்படை அதிகாரி பாவ்லோ ட்ரூயு உள்ளிட்ட அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அபுதாபியில் ஏன்?
"அபுதாபியில் வைத்து இந்த காரை அறிமுகம் செய்வதில் காரணம் இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்களும், ரசிகர்களும் இருக்கின்றனர். இதன் காரணமாகவே அபுதாபியில் இந்த காரை இவ்வளவு பிரம்மாண்ட முறையில் அறிமுகம் செய்கிறோம்," என்று லம்போர்கினி சிஇஓ., ஸ்டீபன் விங்கெல்மேன் தெரிவித்தார்.

வண்ணமயமான விழா
விமானம் தாங்கி கப்பலில் நடந்த விழாவை பிரபல பாடகியும், நடிகையுமான எலீனா போனெல்லி குரலில் பாடலுடன் விழா துவங்கியது. மேலும், விழாவில் பங்கேற்றவர்கள் இந்த ஹைப்பர் காரில் அமர்ந்து சிலிர்ப்பு தெரிவித்தனர்.

விலை
மொத்தம் 9 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன. வரிகள் தவிர்த்து ஒரு காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.27.86 கோடியாகும்.

எஞ்சின்
இந்த காரில் 740 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு ஐஎஸ்ஆர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்
0- 100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 2.9 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 355 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், அதிசக்திவாய்ந்த பிரேக்குகள் கொண்ட இந்த கார் கார்பன் ஃபைபர் ரீ- இன்ஃபோர்ஸ்டு பாலிமர் பிளாஸ்டிக் மோனோகாக் சேஸீயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 1,490 கிலோ எடை கொண்டது. கூரை இல்லாமல் பறக்கும் வல்லமை கொண்ட இந்த ஹைப்பர் ஓட்டுபவருக்கு செம த்ரிலிங்கை அளிக்கும்.


Click it and Unblock the Notifications








