2015ல் டிஃபென்டர் உற்பத்தி நிறுத்தம்: லேண்ட்ரோவர் அறிவிப்பு

By Saravana

உலக முழுவதும் தனி மதிப்பை பெற்ற லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி தனது 67ம் வயதில் ஓய்வு பெறுகிறது. டிஃபென்டரின் கட்டுமஸ்தான உடல்வாகை பார்த்து ஆசைப்படாத வாடிக்கையாளர்களே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவுக்கு உடல்வாகிலும், ஆற்றலிலும் சிறந்த எஸ்யூவியாக விளங்கி வருகிறது லேண்ட்ரோவர் டிஃபென்டர். 1948ல் தயாரிப்பு துவங்கப்பட்ட டிஃபென்டர் நீண்ட பாரம்பரியத்துடன் வெற்றி மாடலாக வலம் வந்தது. இந்த நிலையில், 2015ம் ஆண்டுடன் டிஃபென்டர் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

சீரிஸ் 1 லேண்ட்ரோவர் என்ற பெயரில்தான் டிஃபென்டர் முன்னர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 1990ம் ஆண்டு முதல் டிஃபென்டர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கட்ட கடைசி

கட்ட கடைசி

இங்கிலாந்திலுள்ள சோலிஹல் ஆலையில் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி லேண்ட்ரோவர் டிஃபென்டர் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசுப் பிரச்னை

மாசுப் பிரச்னை

லேண்ட்ரோவர் டிஃபென்டர் இன்னும் எத்துனை காலம் மார்க்கெட்டில் இருந்தாலும் மதிப்பு உண்டு. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு பிரச்னைகளால் பலவந்தமாக டிஃபென்டர் உற்பத்தியை நிறுத்த லேண்ட்ரோவர் முடிவு செய்துள்ளது.

விற்பனை நிறுத்தம்

விற்பனை நிறுத்தம்

அமெரிக்காவில் மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னைகளால் ஏற்கனவே டிஃபென்டர் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இதேபோன்றே பல்வேறு நாடுகளில் டிஃபென்டர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 மாற்று மாடல்

மாற்று மாடல்

டிஃபென்டருக்கு மாற்றாக டிசி 100 என்ற கான்செப்ட்டை லேண்ட்ரோவர் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி லேண்ட்ரோவர் வசமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை இல்லை. டிஃபென்டர் இடத்தை நிரப்புவதற்கு கட்டாயம் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று லேண்ட்ரோவர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2013, 16:48 [IST]
English summary
Production of Land Rover Defender, the iconic SUV from the United Kingdom will come to an end in little over two years. The news has been confirmed by Jaguar Land Rover spokespersons to Automotive Business Review.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+