குறைந்த விலை ஃப்ரீலேண்டர் 2 மாடல் அறிமுகம்!
இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், குறைந்த விலை ஃப்ரீலேண்டர் 2 வேரியண்ட்டை லேண்ட்ரோவர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்த ஃப்ரீலேண்டர் 2 ஆடம்பர எஸ்யூவி கார் எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிசினஸ் கிளாஸ் என்ற பெயரில் புதிய எஸ் வேரியண்ட்டை லேண்ட்ரோவர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

குறைந்த விலை வேரியண்ட்
எஸ்இ வேரியண்ட் ரூ.39.19 லட்சத்திலும், எச்எஸ்இ வேரியண்ட் ரூ.44.42 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய எஸ் வேரியண்ட் ரூ.37.11 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

வசதிகள் குறைப்பு
பனரோமிக் சன்ரூஃப், ரிவர்ஸ் கேமரா, மெரிடியன் மியூசிக் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட முன் இருக்கைகள் ஆகியவை புதிய எஸ் வேரியண்ட்டில் இருக்காது.

எஞ்சின்
ஃப்ரீலேண்டர் 2 எஸ் வேரியண்ட்எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி ஆற்றலையும், 420 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

மைலேஜ்
0-100 கிமீ வேகத்தை வெறும் 11.2 வினாடிகளில் தொட்டுவிடும். லிட்டருக்கு 12.39 கிமீ மைலேஜ் தரும் என சான்றளிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
அதேவேளை, பாதுகாப்பு அம்சங்கள் குறைக்கப்படவில்லை. டிராக்ஷன் கன்ட்ரோல், ஏர்பேக், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








