கான் கைவண்ணத்தில் சிலிர்க்க வைக்கும் ரேஞ்ச்ரோவர் வோக்!
பிரிட்டனை சேர்ந்த ஏ.கான் கார் கஸ்டமைஸ் நிறுவனம் தற்போது ரேஞ்ச்ரோவர் வோக் காரில் கூடுதல் மெருகேற்றியுள்ளது.
ரேஞ்ச்ரோவர் வோக் வாடிக்கையாளர்களை உசுப்பேற்றும் வகையில் மாற்றம் கண்டிருக்கும் வோக் முழுவதும் கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த சிக்னேச்சர் எடிசன் ரேஞ்ச்ரோவர் வோக்கின் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

கருப்பு மயம்
சான்டோரினி பிளாக் மெட்டாலிக் வண்ணத்தில் வோக் கண்ணை கவர்வதாக இருக்கிறது.

அலாய் வீல்
9.5*22 ஆர்எஸ் 600 அலாய் வீல்களில் தங்க நிறத்திலான பூச்சு கொண்ட பிரேக் காலிபர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எங்கேயும் கருப்பு
ரியர் பம்பர் மற்றும் கதவுகளிலும் சாட்டின் பிளாக் என்ற கருப்பு வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
வெளிப்புறத்திலிருந்து உள்ளே நுழைந்ததும் அதே கருப்பு நிற மாயஜாலம் நம்மை வரவேற்கிறது. கருப்பு நிற லெதர் இருக்கைகள், பனரோமிக் கண்ணாடி கூரை என அசத்துகிறது.

சாய்வு இருக்கை
இந்த காரில் செமி ஸ்லிப்பர் அளவுக்கு சாய்மானம் கொண்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

விருப்பம்போல் வசதிகள்
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து தருவதாகவும் ஏ கான் கஸ்டமைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








