அதிர்வுகளை உள்வாங்கும் அடுத்த தலைமுறை சைக்கிள் சக்கரம்
சைக்கிள் மற்றும் பைக்குகளில் பொதுவாக ஸ்போக்ஸ் அல்லது அலாய் ஸ்போக்குகள் பொருத்தப்படுகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த டிசைனர் சாம் பியர்ஸ் என்பவர் ஸ்போக்ஸுக்கு பதிலாக லீஃப் ஸ்பிரிங்குகள் கொண்ட சக்கரத்தை வடிவமைத்துள்ளார்.
ஸ்போக்ஸ் கொண்ட சக்கரங்களை விட இந்த சக்கரத்தில் அதிர்வுகள் குறைவு என்பதுடன், தங்கு தடையில்லாமல் பயணம் செய்ய முடியும் என்கிறார் பியர்ஸ். மேலும், தனது கண்டுபிடிப்பு விரைவில் வணிக ரீதியிலான உற்பத்தி நிலையை எட்டும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

லீஃப் ஸ்பிரிங்
ஒரு சக்கரத்தில் மூன்று லீஃப் ஸ்பிரிங்கை பொருத்தியுள்ளார் பியர்ஸ்.

ஐடியா
ஒருமுறை விமான நிலையத்தில் பியர்ஸ் காத்திருந்தபோது, ஒரு தம்பதி டிராலியில் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது, அந்த டிராலி ஏற்ற இறக்கத்தில் ஏறாமல் தடுமாறியது.

களமிறங்கிய பியர்ஸ்
டிராலி சிறிய தடுப்பின் மீது ஏறாததை பார்த்த பியர்ஸ் உடனடியாக தடுப்புகள் இருந்தாலும் தங்கு தடையில்லாமல் செல்லும் சக்கரத்தை வடிவமைக்க எண்ணினார்.

லீஃப் ஸ்பிரிங் சாதகம்
இந்த லீஃப் ஸ்பிரிங் உள்வாங்கி மீண்டும் சாதாரண நிலைக்கு வந்துவிடும் தன்மை கொண்டது. எனவே, தடுப்புகள் இருந்தாலும் அதிர்வுகள் இல்லாமலும், தடையில்லாமலும் செல்ல முடியும் என்கிறார் பியர்ஸ்.

பைக்குகளுக்கு....
தற்போது லீஃப் ஸ்பிரிங்குடன் 20 இன்ச் சக்கரத்தை வடிவமைத்துள்ளார். எதிர்காலத்தில், அனைத்து வித பைக்குகளுக்கும் இதுபோன்ற சக்கரங்களை வடிவமைக்க பியர்ஸ் திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








