ரூ.20,000 முன்பணம் + ரூ.55,000 சேமிப்பு... நானோவுக்கு சலுகைகள்!
புத்தாண்டு வருகையையொட்டி, இருப்பு இருக்கும் கார்களை கழித்துக் கட்டுவதற்காக பெரும்பாலான கார் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது அனைத்து கார்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக, நானோ காருக்கு அதிரடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. ஒரு இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கான முன்பணத்துடன் சென்றால் நானோ காரை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முன்பணம்
ரூ.20,000 மட்டுமே முன்பணம் செலுத்தி, குறைந்த வட்டி வீதங்களில் புதிய நானோ காரை கடன் திட்டத்தில் வாங்கும் வாய்ப்பை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சேமிப்பு சலுகைகள்
ரூ.55,000 வரையிலான சேமிப்பு சலுகைகளையும் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. வரும் 28ந் தேதி வரை நானோ காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்.

மைலேஜ்
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் 36 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

வாரண்டி
நானோ காருக்கு 4 ஆண்டுகள் அல்லது 60,000 கிலோமீட்டருக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

எஞ்சின்
38 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க்கையும் அளிக்கும் 624சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

இடவசதி
4 பேர் செல்வதற்கான இருக்கை வசதி, 80 லிட்டர் பூட் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது.

குறிப்பு
டாடா நானோ காருக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.
நானோ காரிலுள்ள வசதிகள், விலை உள்ளிட்ட முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








