புதிய ஸ்போர்ட்ஸ் காரின் டீசரை வெளியிட்ட லூக்ரா!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமாவின் 6 ம் பாகத்தில் லூக்ரா எல்சி470 என்ற பழைய மாடலை அடிப்படையாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் பயன்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவை சேர்ந்த லூக்ரா பிராண்டு காருக்கு இந்த சினிமா மூலம் உலக அளவில் பெரிய அளவில் பிரபலம் கிட்டியது.

இந்த பிரபல்யத்தை தக்க வைக்கும் விதமாக புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை லூக்ரா அறிமுகப்படுத்த உள்ளது. இது பழைய டிசைன் அமைப்பை கொண்டிராமல், புத்தம் புதிய டிசைனாக இருக்கும். லூக்ரா வெளியிட்டிருக்கும் 3 டீசர்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டு பெயர்

குறியீட்டு பெயர்

2.2 ரோட்ஸ்டெர் என்ற குறியீட்டு பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. இது கன்வெர்ட்டிபிள் ரக ஸ்போர்ட்ஸ் காராக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஜெனரல் மோட்டார்ஸ் அல்லது மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி எஞ்சினை பெற்று பொருத்த லூக்ரா திட்டமிட்டுள்ளது. ஏஎம்ஜியின் எம்156 6.2 லிட்டரர் வி8 எஞ்சின் இந்த காரில் பொருத்தப்படலாம். இந்த எஞ்சின் 457 பிஎச்பி சக்தியை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

கார்பன் ஃபைபர்

கார்பன் ஃபைபர்

எல்சி470 கார் போன்ற ட்யூபியுலர் சேஸீ மற்றும் கார்பன் ஃபைபர் பாடியுடன் டிசைன் செய்யப்பட உள்ளது.

கார்வெட் ஸ்டிங்ரே டிசைன்

கார்வெட் ஸ்டிங்ரே டிசைன்

செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே காரின் டிசைனை மனதில் வைத்து இந்த காரை லூக்ரா வடிவமைத்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

இதுதாங்க எல்சி470

இதுதாங்க எல்சி470

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட எல்சி470 கார் இதுதான். இந்த காரில் 600 எச்பி பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2013, 10:14 [IST]
English summary
Now that everyone is taking notice, the company has decided to release a brand new car. Not a retro styled one, but a modern day sports car. As of now Lucra has only released three images of the said sports car on its Facebook page, with little more to go on. But we can be sure the new car will be just as powerful as the movie car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+