இந்திய சொகுசு கார் மார்க்கெட்டின் இன்றைய நிலை என்ன?

By Saravana
Luxury Car
சிறிய கார் மார்க்கெட் சுணக்கமாக இருந்து வரும் நிலையில், சொகுசு கார் மார்க்கெட்அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

கடந்த காலங்களில் சிறிய கார்களின் விற்பனை பல உச்சங்களை தொட்டு வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது சிறிய கார் மார்க்கெட்டின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை.

இந்த நிலையில், சொகுசு கார்கள் மற்றும் பிரிமியம் கார்களின் விற்பனை எதிர்பார்ப்புக்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதுகுறித்து ஃபிராஸ்ட் அண்ட் சுல்லிவேன் நிறுவனம் நடத்திய ஆய்வில் 2011-2020க்கும் இடையிலான நடப்பு பத்தாண்டுகளில் சொகுசு கார் மார்க்கெட் 6 மடங்கு வளர்ச்சி பெறும் என்று கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-12ம் ஆண்டில் 53,000 சொகுசு மற்றும் பிரிமியம் கார்கள் விற்பனையாகின. 2012-13க்கு இடையிலான நடப்பு நிதி ஆண்டில் 54,000 கார்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் 3 லட்சம் சொகுசு கார்கள் விற்பனையாகும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, அமெரிக்க, ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் ஸ்திரமான நிலையை அடைந்துவிட்டன.

எனவே, தங்களது எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்கு இந்தியாவை மிக முக்கியமான மார்க்கெட்டாக கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும், தங்களது விற்பனை வளர்ச்சியை எட்டுவதற்கு ஏதுவாக ஏராளமான புதிய மாடல்களையும் களமிறக்க திட்டமிட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, January 31, 2013, 10:16 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+