ஒரே வாரத்தில் 100 புக்கிங்குகளை அள்ளிய ரூ.18 கோடி சூப்பர் கார்!

கடந்த மாத இறுதியில் கத்தார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.18 கோடி விலை கொண்ட லைகன் சூப்பர் காருக்கு இதுவரை 100 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அரபு நாட்டின் முதல் சூப்பர் கார் என்ற பெருமை கொண்ட இந்த காரை லெபனான் நாட்டை சேர்ந்த டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 750 பிஎம்சபி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் கொண்ட இந்த காரின் டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், இதன் இன்டிரியர் டிசைன் மற்றும் டிஜிட்டல் கன்ட்ரோல் ஆகியவை இந்த காரின் மதிப்பை கூட்டும் அம்சங்கள். இந்த புதிய காருக்கு குவிந்து வரும் ஆர்டர்கள் குறித்து டபிள்யூ மோட்டார்ஸ் சிஇஓ ரால்ஃப் தெப்பாஸ் கூறியதாவது,"

"மொத்தம் 7 கார்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்தோம். ஆனால், லைகனுக்கு ஏகப்பட்ட புக்கிங்குகள் குவிந்து வருகிறது. இதுவரை 100 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில், பெரும்பாலானவர்கள் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள். ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்தும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இத்தாலி நாட்டின் டூரின் என்ற இடத்திலுள்ள ஆலையில் முதலில் இந்த சூப்பர் கார் உற்பத்தி செய்யப்படும்.

பின்னர், துபாய், தோஹா அல்லது அபுதாபியில் இந்த காரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் 750 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் மணிக்கு 390 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டது.

உந்து சக்தி திறன்

உந்து சக்தி திறன்

வெறும் 2.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள் எல்இடி ஹெட்லைட்டுகள், தங்க வண்ண கைத்தயல்கள் கொண்ட லெதர் இருக்கைகள் என பணத்திற்கு இணையான அம்சங்கள் உண்டு. பல்வேறு வசதிகளை தரும் 3டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, உயர் ரக தொழில்நுட்ப வசதிகளை டேஷ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

விலை இந்த சூப்பர் காருக்கு ரூ.18 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லைகன் சூப்பர் கார்

லைகன் சூப்பர் கார்

லைகன் சூப்பர் கார்

லைகன் சூப்பர் கார்

லைகன் சூப்பர் கார்

லைகன் சூப்பர் கார்

லைகன் சூப்பர் கார்

லைகன் சூப்பர் கார்

More from DriveSpark

Article Published On: Thursday, February 7, 2013, 10:45 [IST]
English summary
Lykan Hypersport, the Arab super car from W Motors has emerged as a block buster for the carmaker despite its expensive price of $3.4 million. The Lykan Hypersport was unveiled at the Qatar Motor Show only in the end of January and within a week it has received ore than 100 bookings.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+