சென்னை ரேஸ் டிராக்கில் ஃபார்முலா- 2 பந்தயங்கள் நடத்த அனுமதி!

By Saravana

சென்னை, இருங்காட்டுக்கோட்டையில் அமைந்திருக்கும் மோட்டார் பந்தய களம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஃபார்முலா- 2 மற்றும் மோட்டோஜீபி மோட்டார்சைக்கிள் பந்தயங்களை இங்கு நடத்துவதற்கு சர்வதேச மோட்டார் பந்தய கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்(MMRT) என்று அழைக்கப்படும் இந்த பந்தய களம் 1986ல் அமைக்கப்பட்டது. மொத்தம் 3.7 கிமீ நீளம் கொண்ட பந்தய களம் இந்தியாவிலிருந்து சர்வதேச போட்டிகளுக்கு செல்லும் வீரர்களுக்கான பயிற்சி களமாக திகழ்ந்து வருகிறது.

Madras Motor Race Track

இந்த நிலையில், இருங்காட்டுக்கோட்டை பந்தய களம் தற்போது 3.9 கிமீ நீளம் கொண்டதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மோட்டார் பந்தய கூட்டமைப்பின் விதிகளுக்கு இணங்க அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பந்தய களம் துபாய் ஆட்டோட்ரோம் பந்தய களத்தின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச தரத்திற்கு இணையாக அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Madras Motor Race Track

அடுத்த ஆண்டு ஃபார்முலா- 1 கார் பந்தயம் மற்றும் நவம்பரில் நடக்க இருந்த வேர்ல்டு சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஃபார்முலா- 2 கார் பந்தயம் மற்றும் மோட்டோஜீப் பந்தயங்களை சென்னை மோட்டார் பந்தய களத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது மோட்டார் பந்தய ரசிகர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2013, 10:21 [IST]
English summary
After the series of disheartening developments that hit the Indian motorsports community, in the form of cancellation of two scheduled international races at the Buddh International circuits, mercifully, there is now some good news. Madras Motor Race Track has been revamped to comply with FIA Grade 2 race track.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+