ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துடன் புதிய பொலிரோ பிக்கப் டிரக் அறிமுகம்
மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் பொலிரோ பிளாட் பெட் என்ற புதிய பிக்கப் டிரக் மாடலை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
தேவையின்றி எரிபொருள் விரயமாவதையும், கார்பன் புகை வெளியேறுவதையும் தவிர்க்கும் வகையில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் இந்த பிக்கப் டிரக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோ ஹைபிரிட் என்ற பெயரில் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட மாடல்களில் இதனை முன்னரே அறிமுகம் செய்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது பொலிரோ பிக்கப் டிரக்கிலும் இந்த புதிய மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்தை புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.
இதுதவிர, அதிக இடவசதி கொண்டதாக இந்த புதிய பிக்கப் டிரக் இருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த பிக்கப் டிரக் 1.25 டன் எடை சுமக்கும் திறன் கொண்டது.
63 எச்பி பவரையும், 195 என்எம் டார்க்கையும் வழங்கும் எம்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய பொலிரோ பிக்கப் டிரக் லிட்டருக்கு 13.86 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வண்ணம், டியூவல் டோன் அப்ஹோல்ஸ்டரி, ஹெட்ரெஸ்ட்டுகள், டிரைவர், சக பயணிக்கு சீட் பெல்ட்டுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும். மேலும், மொபைல் ஹோல்டர், சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய பொலிரோ பிளாட் பெட் பிக்கப் டிரக்குக்கு 3 ஆண்டுகள் வாரண்டியை மஹிந்திரா வழங்குகிறது. ரூ.5.45 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








