கோவையில் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு!
கோயம்புத்தூர்: கோவையில், மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் மல்டி பிராண்டி கார் சர்வீஸ் சென்டர் திறக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனம் மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த நிறுவனத்தின் கார் சர்வீஸ் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோயம்புத்தூரில், தனது மல்டி பிராண்டு கார் ஒர்க்ஷாப்பை திறந்திருக்கிறது. 25,000 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஒர்க்ஷாப்பில் ஒரே நேரத்தில் 15 கார்களை பழுது நீக்கும் வசதிகொண்டது.
மாதத்திற்கு 1,000 கார்கள் வரை பழுது பார்க்கும் வசதியுடன் இந்த புதிய ஒர்க்ஷாப்பை மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் திறந்துள்ளது. தமிழகத்தில் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் 4வது ஒர்க்ஷாப் இது என்பது குறிப்பிடத்தக்கது. 4/5C, யூனியன் ரோடு, கவுண்டம்பாளையம், கோவை-641030 என்ற முகவரியில் இந்த ஒர்க்ஷாப் செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications








