கோவையில், மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸின் மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையம்!

கோயம்புத்தூரில் அனைத்து பிராண்டுகளின் கார்களையும் ஒரே இடத்தில் சர்வீஸ் செய்யும் வசதி கொண்ட மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் கார் சர்வீஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் 4வது கார் சர்வீஸ் மையமாகும்.

பயிற்சி பெற்ற பணியாளர்களின் மூலம் அனைத்து பிராண்டு கார்களையும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்யும் வகையில் இந்த சர்வீஸ் மையத்தை திறந்திருப்பதாக மஹிந்திரா தெரிவித்துளளது. மேலும், குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து தரும் வகையில் நவீன வசதிகளை இந்த சர்வீஸ் மையம் கொண்டிருக்கிறது.

திறப்பு விழா

திறப்பு விழா

கடந்த 9ந் தேதி இந்த சர்வீஸ் மையம் திறக்கப்பட்டது. பிரபல மருத்துவர் வித்யாசங்கர் இந்த சர்வீஸ் மையத்தை திறந்து வைத்தார்.

சிறப்பான வசதி

சிறப்பான வசதி

25,000 சதுர அடி பரப்பளவில் இந்த சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவான சர்வீஸ்

விரைவான சர்வீஸ்

ஒரே நேரத்தில் 15 கார்களை பழுதுபார்க்கும் வசதிகளுடன் இந்த சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை

பரிசோதனை

கார்களுக்கான 50 வகையான பரிசோதனைகள் இங்கு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு

இலக்கு

ஒரு மாதத்திற்கு 1,000 கார்கள் வரை இந்த சர்வீஸ் மையத்தில் பழுதுபார்த்து தர முடியும் என மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் தெரிவித்துள்ளது.

முகவரி

முகவரி

4/5C, யூனியன் ரோடு, கவுண்டம்பாளையம், கோவை-641030 என்ற முகவரியில் செயல்படுகிறது.

அதிக கார்கள்

அதிக கார்கள்

கோவையில் 2.25 லட்சம் கார்கள் இருக்கின்றன. எனவே, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாகவும், விரைவாகவும் சேவை வழங்கும் விதத்தில் இந்த சர்வீஸ் மையம் திறக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் தெரிவித்துள்ளது.

சிறந்த சேவை

சிறந்த சேவை

இலவச பிக்கப், டிராப் வசதி, தரமான ஸ்பேர் பார்ட்ஸ், திறமையான பணியாளர்கள் என ஓர் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2013, 12:56 [IST]
English summary
Mahindra First Choice Services (MFCS), India's leading multi-brand car workshop company, launched its first workshop in Coimbatore.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+