அக்டோபர் முதல் கார்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
அனைத்து கார்களின் விலையையும் 2 சதவீதம் வரை உயர்த்துவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
பயணிகள் மற்றும் வர்த்தகப் பிரிவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மஹிந்திரா கார்களின் விலை மாடலுக்கு தக்கவாறு ரூ.6,000 முதல் ரூ.20,000 வரை அதிகரிக்கிறது.

ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கமான நிலையும், மூலப்பொருட்களின் விலை உயர்வும்தான் இந்த விலை உயர்வு அறிவிப்புக்கு காரணமாகிவிட்டதாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








