கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வருகிறது 'ஸ்பெஷல்' ஸ்கார்ப்பியோ
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு வருகிறது. ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்பெஷல் எடிசன் ஸ்கார்ப்பியோவின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
2010ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பெஷல் எடிசன் ஸ்கார்ப்பியோவில் இருக்கும் அதே அம்சங்களுடன் இந்த புதிய ஸ்கார்ப்பியோ வரும் என்று தெரிகிறது. ஸ்பெஷல் எடிசன் ஸ்கார்ப்பியோவில் இடம்பெற இருக்கும் அம்சங்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் அம்சங்கள்
முகப்பு மற்றும் வெளியில் தெரியும்படியாக ஸ்பெஷல் எடிசன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், பனி விளக்குகளுக்கு மேலே டீகெல்ஸ் மற்றும் கருப்பு நிற ஸ்கஃப் பிளேட் தெரிகிறது. குரோம் பூச்சுடன் கூடிய அலாய் வீல்கள் ஆகியவை தெரிகிறது.

டிவிடி பிளேயர்
கடந்த 2010ம் ஆண்டு ஸ்பெஷல் எடிசன் ஸ்கார்ப்பியோவில் உள்பக்க கூரையில் டிவிடி பிளேயர் பொருத்தப்பட்டு வந்தது. அதேபோன்றே இப்போதும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர அம்சங்கள்
ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்ட லெதர் இருக்கைகள், லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், லெதர் இன்டிரியர் உள்ளிட்டவை கூடுதலாக இருக்கலாம்.

லிமிடேட் மாடல்
2010ம் ஆண்டு ஸ்பெஷல் எடிசன் மாடலில் மொத்தம் 1,000 ஸ்கார்ப்பியோக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று, இப்போதும் 1,000 ஸ்கார்ப்பியோக்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

டஸ்ட்டர் நெருக்கடி
கடந்த மாதம் டஸ்ட்டரைவிட பின்னுக்குத் தள்ளி ஸ்கார்ப்பியோ முன்னிலை பெற்றது மஹிந்திராவை உற்சாகத்தை தந்துள்ளது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கார்ப்பியோவை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா.


Click it and Unblock the Notifications








