4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது மஹிந்திரா குவான்ட்டோ

கடந்த ஆண்டு செப்டம்பரில் குவான்ட்டோ காரை மஹிந்திரா அறிமுகம் செய்தது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மினி எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
7 சீட்டர் வசதி கொண்ட இந்த காரில் ஏராளமான வசதிகளும், இடவசதியும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும், சரியான விலையும் கூட ஒரு காரணம். இந்த நிலையில், 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் குவான்ட்டடோவை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா.
இந்த காரின் சோதனை ஓட்டம் புனே அருகே நடத்தப்பட்டு வருகிறது. புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட குவான்ட்டோவில் பின்புற ஜம்ப் இருக்கைகள், பின்புற படிக்கட்டு ஆகியவை மிஸ்ஸிங். மேலும், இந்த காரில் 4 சிலிண்டர் எஞ்சினை மஹிந்திரா பொருத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் குவான்ட்டோ காரின் 4 வீல் டிரைவ் மாடலை சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








