அடுத்த மாதம் மஹிந்திரா ஹேட்ச்பேக் வைப் ரிலீஸ் - புதிய படங்கள்
அடுத்த மாதம் புதிய ஹேட்ச்பேக் காரை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய காருக்கு வெரிட்டோ வைப் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை முக்காடு போட்டு சோதனை செய்யப்பட்டு வந்த மஹிந்திரா வைப் கார் தற்போது முதன்முறையாக ஒட்டுத் துணியில்லாமல் சோதனை செய்யப்பட்டபோது கேமரா கண்ணில் சிக்கியிருக்கிறது.
இந்த புதிய மஹிந்திரா ஹேட்ச்பேக் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு இணையான ரகத்தில் வருகிறது. ரூஃப் ரயில், டூவல் டோன் பின்புற பம்பர் ஆகியவை அழகு சேர்க்கின்றன. முன்பக்கம் வெரிட்டோ செடான் காரை போன்றே இருக்கிறது. அதிக மாற்றங்கள் தெரியவில்லை.
1.5 லிட்டர் கே9கே எஞ்சினுடன் வைப் வரும் என தெரிகிறது. பெட்ரோல் மாடலில் வருவது சந்தேகமே. ஸ்லைடரில் ஆட்டோகார் இந்தியா தளத்தில் வெளியான படங்களையும், அதற்கடுத்து சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டபோது மோட்டார் விகடன் வாசகர் எடுத்த படங்களையும் காணலாம்.

மஹிந்திரா வைப்

மஹிந்திரா வைப்

மஹிந்திரா வைப்

மஹிந்திரா வைப்

மஹிந்திரா வைப்

மஹிந்திரா வைப்
Images Source: Autocarindia and Motorvikatan


Click it and Unblock the Notifications








