நாளை அறிமுகமாகிறது மஹிந்திராவின் புதிய ஹேட்ச்பேக் கார்
வைப் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ஹேட்ச்பேக் காரை நாளை மும்பையில் நடைபெறும் விழாவில் மஹிந்திரா நிறுவனம் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. இந்த புதிய காரின் டீசர் படத்தையும் மஹிந்திரா வெளியிட்டிருக்கிறது.
4 மீட்டர் நீளத்துக்குள் பொருட்களை வைப்பதற்கு அதிக இடவசதியுடன் வருவதால், ஹேட்ச்பேக் மற்றும் என்ட்ரி லெவல் செடான் கார்களுக்கு இது போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் 1.5 லிட்டர் டிசிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 66 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க்கையும் இந்த கார் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த புதிய டீசல் கார் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








