மஹிந்திராவின் பொலிரோ மேக்ஸி டிரக் ப்ளஸ் பிக்கப் டிரக் அறிமுகம்

இதில், 2523சிசி காமன் ரெயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 63 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 5.5 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்ட இந்த பிக்கப் டிரக் வணிகர்களின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
அராய் சான்றுபடி லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேஜ்-3 மாடல் ரூ.4.33 லட்சத்திலும், பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட மாடல் ரூ.4.43 லட்சம் மஹாராஷ்டிரா எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








