கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் வெரிட்டோ அறிமுகம்
என்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டில் மஹிந்திரா வெரிட்டோ தற்போது வாங்குவதற்கான கூடுதல் காரணங்களுடன் களமிறங்கியிருக்கிறது. ஆம். கூடுதல் வசதிகளுடன் ஸ்பெஷல் எடிசன் வெரிட்டோ செடான் காரை மஹிந்திரா அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மார்க்கெட்டில் அதிக வசதிகள் கொண்ட காராக தற்போது வெரிட்டோ மாறியிருக்கிறது.
வெரிட்டோ எக்ஸிகியூட்டிவ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய வெரிட்டோ மாருதி டிசையர், ஃபோர்டு கிளாசிக் கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய வெரிட்டோவில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரே வண்ணம்
பியர்ல் ஒயிட் கலரில் மட்டுமே புதிய ஸ்பெஷல் எடிசன் வெரிட்டோ கிடைக்கும்.

ஸ்பெஷல் என்ன?
புதிய அலாய் வீல்கள், பாடி டிக்கல்ஸ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பேட்ஜ் ஆகியவை புதிய வெரிட்டோவிற்கு கூடுதல் வசீகரத்தை கொடுக்கிறது. புளூ விஷன் ஹெட்லைட்டுகளும் வெரிட்டோவின் கூடுதல் அம்சம்.

கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்
வெரிட்டோவின் வெளிப்புறத்தை கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்கள் அலங்கரிக்கின்றன.

பக்கவாட்டு தோற்றம்
ஸ்பெஷல் வெரிட்டோவின் அழகு சேர்க்கும் ஸ்டிக்கர்

அலாய் வீல்
புதிய 10 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ்
வெரிட்டோவின் பின்புறத்தில் வெரிட்டோ பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளதை காணலாம்.

மியூசிக் சிஸ்டம்
புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய 2 டின் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஜிபிஎஸ் சிஸ்டம்
டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய ஜிபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ் மற்றும் எஞ்சின் இம்மொபைலைசர் ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்.

எஞ்சின்
1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வெரிட்டோ கிடைக்கும்.

விலை
ரூ.7.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ஸ்பெஷல் எடிசன் வெரிட்டோ வந்திருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் வெரிட்டோவின் மிக உயர் ரக வேரியண்ட்டாக இது விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








